தெருவோர மக்கள்

தெருவோர மக்கள்
தென்நகர் நாட்டின்
விளம்பரமில்லா
கண்கவரற்ற விற்பனையாக
பொருட்கள் நாங்கள்
வேரில்லா வாழ்க்கையில்
வியர்வை துடைக்க ஆளில்லை
வெறும் கானல்நீர் கண்ணீரில்
துயரம் சொல்லிப் பயனில்லை
உண்ட மீதி கிடைக்க
ஊரெங்கும் ஊர்வலம்
மென்று திங்கத் தகுதியில்லா
விழுங்கும் பசி நாக்குகள்
அழகுத் துணி உடுத்திட
ஆசை தான் எங்களுக்கும்
பாவம் எங்கள் மேனிக்கோ
பளிச்சுடும் ஆடை பிடிப்பதில்லை
ஊரைத் தொலைத்த
ஊர்க்குருவிகள் நாங்கள்
அன்றாட ஏற்ற இறக்க வாழ்வில்
என்றும் இறக்கமே எங்கள் வாழ்வில்.

ரா. அன்பரசு
ஆங்கில ஆசிரியர்
கோவை.

எழுதியவர் : அன்பு (14-Sep-18, 6:58 pm)
சேர்த்தது : ANBARASU
பார்வை : 45

மேலே