எனக்குள் உதயமாகும் மாற்றம்

அன்பா இருந்தாலும் சரி,
பணமா இருந்தாலும் சரி,
அடுத்தவர்கள் கையை எதிர்ப்பார்க்கும் மனிதர் பிச்சைக்காரர்.
பிறர் தேவை அறிந்து
கொடுப்பவரே செல்வந்தர்.
இந்த வகையில் நான் பிச்சைக்காரனாக தான் இருக்கிறேன்.
செலவிற்கு அப்பா அம்மா கையை எதிர்பார்க்கும் நிலைமையில் இருக்கிறேன்.
இந்த நிலைமையை மாற்றிக் கொள்ள நான் முயற்சிக்கிறேன்.
பல வழிகளில் தடைகள் தான் ஏற்படுகின்றன.
காரணம் என்னவாக இருக்கும்?

ஒருவேளை நான் சரியாக முயற்சிக்காமல் இருக்கிறேனோ என்ற சந்தேகம் தான்.
என்னை தடுப்பது எது?
எனக்குள் தேடுகிறேன்.
சோம்பேறித்தனம். ஆம், அதை தூக்கி தீயில் இட வேண்டும்.

நான் அயர்ந்து சோர்வில் அமரும் போதெல்லாம் வாழ்க்கை என்னை மனதில் ஓங்கி அறிகிறது.
மற்றவரோடு ஒப்பிடாதே என்கிறோம்.
ஆனால் பல விடயங்களில் நான் ஒப்பிட்டுப் பார்த்தே ஆசை கொள்கிறோம்.
நம்முடைய மன ஏக்கங்களுக்கு நாம் மதிப்பளிக்கும் நேரம் அங்கு வெறும் சோகமே நிரம்பி இருக்கும்.
சரியான நிலைப்பாடு எது?
மன ஏக்கங்களுக்கும் இடம் அளிக்காமல் சரியான கடமையைச் செய்வது.
சரியான கடமை எனில் அது மகத்தான லட்சியத்திற்கானது.
எனது லட்சியம் மனதில் விதைக்கப்பட்டு அது பெருமரமாகிவிட்டது.
சத்தியமேவசெயதே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Sep-18, 7:10 pm)
பார்வை : 1966

மேலே