மகன்வாழ்த்து

மகன்வாழ்த்து

நாதங்கள் உன் நாவில்
நடமாடுமே...!
நீ துயில் காண குயில்கூட்டம்
துதி பாடுமே...!
என் நெஞ்சில்
குடி கொண்ட தமிழானது...!
என்றும் நலம் வாழ
உன்னை வாழ்த்தி இசைக்கின்றது...!

மழை நீர் கொண்ட மேகங்கள்
மனதார வாழ்த்தும்...!
உவர் நீர் கொண்ட கடலும்
அலையாடி வாழ்த்தும்...!
ஒளி கொண்ட திங்கள்..
குளிர் கொண்ட மதியும்
மகிழ்வாய் மகனுனை வாழ்த்திடுமே..!

பூவும் வாழ்த்தும்..,
பூந்தென்றல் வாழ்த்தும்..!
நீரும் வாழ்த்தும்..,
நெருப்பும் வாழ்த்தும்..!
நேசிக்கும் நெஞ்சங்கள்
வாழ்த்திடுமே..!

பறவைகள் தூங்கிடும்
மரம் வாழ்த்தும்..!
இறைவன் வாழ்ந்திடும்
மலை வாழ்த்தும்..!
பஞ்ச பூதங்கள் யாவும்
பகிர்ந்தே வாழ்த்திடுமே..!

நற்பெயர் பெற்று
வாழ்ந்திடவே..
நல் எண்ண மனிதனின்
மனம் வாழ்த்தும்...!
சிறப்புடன் என் மகன்
வாழ்ந்திடவே...
என்றென்றும் என் நெஞ்சம்
வாழ்த்திடுமே...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (15-Sep-18, 7:14 am)
பார்வை : 159

மேலே