சிகரெட்
சிகரெட்...🚭
விரல்களுக்கு
இடையே ஆயுளை
கழிப்பவன்
இதழ்கள் இடையே
உறவை வளர்ப்பவன்
நெருப்பையே
சுவாசிக்கும்
வித்தியாசமான ஜீவன் நான்
நிரந்தரம் அல்லாதவனும்
கூட
என் வெண்ணிற உடம்புக்கு
தீ வைத்து
உன் செங்குறுதி உடலை
சிதைத்து கொண்டாய்
எரிந்து எரிந்து
புகையானேன்
என் முடிவு
உனக்கு புரியவில்லை
முடிவில் காணாமல் நான்
நீயும்
ஒரு நாள்....?

