இயற்கை சக்தி

அளவற்ற அருளிற்கு இயற்கை சாட்சி,
அளவற்ற இருளிற்கு
செயற்கை சாட்சி,
மனம் கொண்ட மருளினால்
இயற்கையை அழித்து செயற்கை கொண்டோம்.
கொண்டதெல்லாம் அநித்தியமாக
அசுந்தம் அதிகரிக்க மன மருள் கூடியதே மிச்சம்.
மருள் நீக்க அருள் வேண்டி இயற்கையில்
சரணடைய யாவும் அங்கே விளங்கும்.
விளங்கிய விளக்கம் நாம் இயற்கையோடு இயற்கையாக படைக்கப்பட்டோம் என்றிட வெகுதூரம் விலகி நின்று சிறுமழையைக் கூட தாங்காமல் கதறுகிறோம்.
கதறும் நாம் அறியாத உண்மை இயற்கை சக்தி நம்முள் நிறைந்திருக்கிறதென்று.
நித்தியமான இயற்கை சக்தியை நம்மில் நாம் உணர்கையில் நம் கதறல்கள் யாவும் அடக்கியிருக்கும்.
உள்ளத்தில் அமைதி நிரம்பியிருக்கும்...