மீனாட்சி தாயே வருவாய் இது சமயம்

குலம் தரும் வளமும், நலம் தரும் வாழ்வும், தரும் அன்னையே!
ஒளி தரும் உவப்பிலா மணியே!
மனத்திடை ஒளிரும் மாசறு பொன்னே!
நினைத்திடும் வாழ்க்கை தந்திடும்,
மீனாட்சி தாயே வருவாய் இது சமயம்.

உண்மைக்கு உயர்வாய் உலகளக்கும் உமையே!
நன்மையே நாளும் தந்திடும் மணி விளக்கே,
பரிவோடு காத்தருளும் பனிமலர் பாதமே!
நித்தம் நிம்மதி தரவே,
மீனாட்சி தாயே வருவாய் இது சமயம்.

பஞ்சங்கள் வாராமல், பாதகங்கள் நேராமல்,
அஞ்சேல் என காலமெல்லாம் காத்திடும் தாயே!
தஞ்சமென சரணடைந்தோம்,
கொஞ்சமும் தாமதியாமல், காத்தருள்வாய்,
மீனாட்சி தாயே வருவாய் இது சமயம்.

பாசங்கள் தொலைந்தாலும், பண்புகள் மறந்தாலும்,
மாறாத உந்தன் அருள் வேண்டும் மாணிக்கமே!
சேராத குணங்கள் வாராதிருக்கவே,
பாராமல் இருக்காமல், உடன் இருப்பாய்,
மீனாட்சி தாயே வருவாய் இது சமயம்.

ஆண்டொன்று கூட, வயதொன்று கூட,
வரும் சிரமங்கள் மாற்றிடும் மரகதமே!
நானென்ற அகந்தையும், நாமென்ற அகங்காரமும்,
மனத்திடை அகற்றிடவாய்,மன்றில் நின்றுடுவாய்,
மீனாட்சி தாயே வருவாய் இது சமயம்.

எழுதியவர் : arsm1952 (23-Sep-18, 10:10 am)
சேர்த்தது : arsm1952
பார்வை : 179

மேலே