சிறப்பான வாழ்க்கை
வரவெல்லாம், செலவென்றால்,
வகுத்தவன் நினைத்தது அது என்பேன்.
கொடுப்பதெல்லாம் அருட் கொடையென்றால்,
தந்தவன் தந்த சிறப்பான வாழ்வென்பேன்.
உண்மையை, பொய்யென்றால்,
சொன்னவன் தகுதி அறிந்து பாரென்பேன்.
உண்மைக்கும், சோதனை வருமென்றால்,
கலி காலத்தின் கோலமென்பேன்.
கோபம் கூடாதென்றால்,
மனசும், நினைவும், மறிக்க வேண்டுமென்பேன்.
தகாதவை கண்ட போது ,
எதிர்ப்புதனை காட்டிடுதல் மேலான செயலென்பேன்.
நேர்மையும், ஒழுக்கமும் உன்னோடிருக்க,
உயர்வுகள் அனைத்தும் தானாக வருமென்பேன்.
தகுதிகள் நிறைக்க, தன்மைகள் உயர,
நாளைய சிறப்பெல்லாம் உனக்கே என்பேன்.