புதியவர் தேவையில்லை

கண்ணுக்குள் உன்
முகத்திரை இருக்க /
கண் கலங்கி அதை
அழித்திடுவேனோ?

நெஞ்சத்தில் நீ
இருக்கையிலே /
துன்பக்கடல் இறங்கி
நீந்திடுவேனோ ?

நீ கொடுத்த முத்தங்கள்
சேமிப்பில் இருக்க /
முத்தமின்றி
தவித்திடுவேனோ .?

உள்ளத்தை ஆழும் அரசு
நீயாக இருக்கையிலே /
பிரிவை நினைத்து
வருந்திடுவேனோ ?

இடைக்காலப் பிரிவு
அன்பின் பரீட்சைக்கான தேர்வு /
உனக்கும் எனக்கும்
காலம் நடத்திவிட்டதாக
உணர்ந்தால் வலிக்கு
வேலி போட்டிட மாட்டேனோ ?

உன் புன்னகை
என் நகையானது /
உன் கூரிய மீசை
என் கன்னத்தில் பதியமானது /
புதிதாய் எதைத் தேடி
நான் இனிமேலும்
அலைய வேண்டுமோ?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-Sep-18, 7:46 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 61

மேலே