பெண்ணுரிமை

வெண்பா

வகுக்காது பெண்ணினத்தை விட்டார் பகுக்கா
தகித்தாரே நம்பெண்டிர் உண்மை -- நகைப்பேன்
அடுப்பூதும் பெண்கள் குடிமைக்கு கந்தாரே
தட்டாகேட் டாருரிமை யும்

குடிமை =நல்குடி பெருமைக்கு உகந்தவர்

பெண்விடுத லைக்குப் பெரியார்யென் னென்செய்தார்
பெண்விடுத லைக்குமற்ற வர்விடவும் --என்னசெய்தார்
பெண்களைக் கூட்டத்தில் கிண்டல்பே சும்கும்பல்
சண்டாளர் பட்டியலில் தள்ளு

ஒப்பாரி வைத்தவனை வீணாய் உயர்த்துகிறார்
எப்பாடு பட்டவரின் பேரைவிட்டு --கூப்பாடேன்
ஒன்றையும்செய்யாது சென்றவனைச் சேர்த்தலும்
ஏனெதற்கு கேளவனை நீ

பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமைத் தீராதாம்
பெண்ணடியை போற்றிய பாரதி -- பொன்னடிபோல்
பெண்வாழ்க வென்றுகூத் தாடுவோம டாவென்று
சொன்னபார திக்குநிகர் யார்

ராசாராம் பாரதி ராசாஜி காந்தியாலே
ராச்சியத்தில் பெண்ணுயரச் சட்டமிட்டார் -- நேசமாய்
நறுக்காய் பொறுப்புகள் கேட்டுப் பெறநாள்
வரவேண்டா மோபொறுங் கள்

எழுதியவர் : பழனிராஜன் (2-Oct-18, 8:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 149

மேலே