நான் ஜாதி பேசுகிறேன்

உங்கள் பெயருக்கு அடுத்து
என் பெயரைத்தான் எழுதுவீர் பத்திரிக்கையில்
உங்கள் பெயரின் கீழே என் பெயரைத்தான் எழுதுவீர்
பள்ளி விண்ணப்பத்தில்
அப்படி ஒரு பத்தி இருக்கையில்

என்னவள் என்றால்தான்
உங்கள் மனைவிக்கே நீர்
தாலி கட்டுவீர்

நான் கீழானவன் மேலானவன்
என வகைப்படுத்தியே அரசும்
வேலை வழங்குகிறது

என் பெயரில் கலவரங்கள்
செய்வோரே
என்னைக் கலை வரங்கள்
கிடைக்கும்

வெற்றி முக்குலத்தோரா முதலியாரா
என்று பார்த்து வருவதில்லை
முயற்சித்து முதலில் யார் வருகின்றாரோ அவரிடமே வரும்

என்னை நேசித்து வெறி
பிடித்து அலைவோர்
அறிவதில்லை
அறியும் சிவனும் ஒன்று என்று
இதை அறியாதவன் மலையானாலும் குன்று என்று

இந்தியாவையே ஜின்னா மூலம் பிரித்த என்னால்
உங்கள் சின்ன இதயங்களை எளிதில் சின்னா பின்னமாக்க இயலும்

நான் ஜாதி உங்கள் அமைதிக்கு
வைப்பேன் தீ
ரத்த வெள்ளம் நான் ருசித்து
உண்ணும் வெல்லம்

யானை போல் எனக்கும் மதம் பிடிக்கும்
யானை பாரதியை மட்டும்
அழித்து
நானோ பாரதத்தையே அழிக்கின்றேன்

என்னோடு மோதுபவன் காயமடைவதில்லை
என்னை ஓதுபவனே அடைகிறான்

என் பெயரை சாதி என்று மாற்றி வையுங்கள் எனக்கு சம்மதம் பிடிக்கும்

எழுதியவர் : குமார் (3-Oct-18, 10:30 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 139

மேலே