ஆபத்தில் உதவுவான் அனாதையைக் காப்பான்

சகுனியின் பகடை உருண்ட போது
சூது வென்றது
பஞ்ச பாண்டவர் தலை கவிழ்ந்தது
அடிமை திரௌபதியின் ஆடை அவிழ்த்த போது
உருண்ட பகடையும் அதிர்ந்து நின்றது
அவிழ்த்து அவிழ்த்து துச்சாதனன் கை சோர்ந்து
சகுனியின் சூது தோற்றது
தரும தேவன் கை உயர்ந்து நின்றது
ஆடை வளர்ந்து சென்றது
துச்சாதனன் கை ஓய்ந்தது !
அறைகூவிய ஆனைக்கு அன்று உதவினான்
அழுகுரல் தோகையின் துயர் இன்று துடைத்தான்
ஆபத்தில் உதவுவான் அனாதையைக் காப்பான் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-18, 10:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே