இந்த நாள் நல்ல நாள்
இந்த நாள் நல்ல நாள்
என்றும் இது சிறந்த நாள்
ஐப்பசி ஏழாம் தேதி
வாழ்த்து சொல்லும் அழகிய நாள்
வண்ண நினைவுகளில் ஞாபகங்கள்
வகை வகையாய் புகழ்ந்துநிற்கும்
இந்த நாள் நல்ல நாள்
தங்கை என்று அழைக்க
அண்ணன்மார் மத்தியில் செல்லமாய்
பிறந்த வெள்ளை மனதழகி
வென்று வந்தாள் அன்பை மட்டும்
கொற்றவர் குடையின் கீழ்
கொஞ்சு தமிழ் சொல்அழகி
பிறந்த நாள் இன்றுதான்
இந்த நாள் நல்ல நாள்