குழப்பமே

கழனியில் உழுதிடும் கணவனுக்கே
கஞ்சி கொண்டு செல்கின்றாள்,
அழகிய கிராம வாழ்வினிலே
அங்க மான அழகிதுவே,
பழகிய பண்புள வாழ்வைவிட்டு
பட்டணம் தேடிப் போனதாலே
குழப்பம் மட்டும் நிலவிடுதே
காணீர் குடும்ப வாழ்வினிலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Oct-18, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 137

சிறந்த கவிதைகள்

மேலே