உன் விழிச்சாரலில்

மாலையின் மஞ்சள் வெய்யில்
நனைத்தது உன் மேனி அழகை
மாலை மலர்களும் உதிர்ந்து
நனைத்தது உன் மேனி எழிலை
மறந்து விடக்கூடாது என்று
மழைச்சாரலும் நனைத்தது
மாலை நிலவும் மகிழ்ந்து நனைத்தது
குளிர்த் தென்றலில் சிலிர்த்து
பூவிதழில் சிரிக்கும் புன்னகை எழிலே
உன் விழிச்சாரலில் நனைகிறதடி
என் காதல் கவிதை நெஞ்சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-18, 7:06 pm)
பார்வை : 136

மேலே