மரணத்தை மிஞ்சிய நிஜம் வேறுண்டா

நாற்றம் எடுக்கும் மேனியின்
மீது ஏனோ அத்தனை நாட்டம்-நமக்கு ,
நாளை மரணிக்கும் வாழ்வில்
இன்று ஏனோ இத்தனை ஓட்டம் ..!!


நானென்றும் ,
எனகென்றும் ,
தனெக்கென்றும்
சேர்த்துவைக்கும் ஒரு கூட்டம் ..
இயற்கையின் தீர்ப்பை மறந்து
பணத்திற்க்காக ஏனோ பெரும் போராட்டம் .?!!


ஜாதி,மதமென்றும்,
உயர்ந்தவனென்றும் ,
தாழ்ந்தவனென்றும்
மனிதனில் பல பல மாறுவேடம் ..


பூக்கும் மலர்கள் எல்லாம்
உதிரும் என மறந்து,
போடாத ஆட்டங்கள் எல்லாம்
போட்டு …


மாய வாழ்வில் சிக்கி
தவிக்கும் மானிடா .!!
வாழும் இவ்வாழ்வு
மாயை என உணரா வரை
அமைதி என்பதேதுடா??

ஒரு பிடி சாம்பலில்
முடியும் இவ்வாழ்வில்
மரணத்தை மிஞ்சிய நிஜம் வேறுண்டா ??

நாள் ஒவ்வொன்றும்
நல் வாழ்வு வாழ்வோம்
அதில் கிட்டும் நினைவுகள்
மட்டுமே சொந்தம் என உணருவோம் ,


நல்நினைவுகளை
சேகரிக்க
அன்பை உண்மையாக
பரிமாறுவோம்

என்றும் ….என்றென்றும் …

எழுதியவர் : ஜீவன் (14-Oct-18, 5:15 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 120

மேலே