உன் நினைவில்
உன்னுடன் இருந்த வேளையில் ஊமையாகி போனது என் மொழிகள்!
மலர்ந்த இதழ்கள் இரண்டிலும் மலர மறுக்கும் வார்த்தைகள்!
கண்ணாலே கதைத்துக் கொண்டு காதல் மொழி உரைத்த நொடிகள்!
இதயத்தின் எண்ணங்களை சொல்லாமலே உணர்ந்த நிமிடங்கள்!
இது மட்டும் போதுமடி!
என் இதய டைரியின் பக்கங்களில் உன் நினைவுகள் பசுமையாய் படர்ந்திடுக்கும்!