என்னவளே நீ வருவாய்
என்னவளே நீ வருவாய்
******************************************
தென்பொதிகைத் தென்றலென எனைஉரசி நின்றவளே !
புண்பதியாதென் நெஞ்சத்து அருமருந்தாய் நீயிருந்து
பண்பதிந்த கவிகட்கு அச்சார மிட்டவளே !
என்பதிநீ யெனக்கூற நேரமொன்று நேரலையோ ?
மண்பதியாம் சொல்மதுரை தண்பதித்த சொக்கனொடு,
அப்பதியை ஆட்சியிடும் கண்ணழகு மீனாளாய் ,
என்பதியை ஆட்கொள்ள என்னவளாய் நீ வரவே ,
துன்பதிக்கு அண்டாது இன்பதிசை என்றென்றும் !
தம்பதியாய் பயணிப்போம் எண்பதிற்கும் மேலுமாய் ! !