இடைவெளி

111 - இடைவெளி : ஆபிரகாம் வேளாங்கண்ணி : தினமணி கவிதைமணியில் எம் கவிதை
○○○

என் னுருவமதை உன்
கண்ணில் நான் பார்க்கிறேன்
உன் னுருவமதை என்
கண்ணில் நீ பார்க்கிறாய்
நம்பிக்கை நிலவுகிறது

உன் மனக் கண்ணில் நான்
என் மனக் கண்ணில் நீ நிஜமாகவே
இருக்கின்றோமா எனும் சந்தேகம்
இருவர் நெஞ்சிலும் அலைமோதிட
இடைவெளி மதிலாகி நிற்கிறது

ஆதலால் நம்முடைய உறவு
தாமரை இலையில் விழும்
மழை துளிபோல் ஒட்டாது தெரித்தோடிடுமோ இல்லை
சிப்பியின் மடியில் விழுந்து
முத்தாக பிறந்து ஜொலிக்குமோ

இருவருக்கும் உள்ள இடைவெளி
சூறாவளி யாகிடுமோ இல்லை ஆறாவலி யாகிடுமோ என்னும்
மனக்கிலி பிடித்து க்கொண்டு
பலியாக் கப்போவது யாரோ

°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"
மும்பை , மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (15-Oct-18, 2:58 pm)
Tanglish : idaiveli
பார்வை : 143

மேலே