இப்படிக்கு மாடுகள்
மான நஷ்ட வழக்கு
மனிதர்களுக்கு எதிராக
பிளாஸ்டிக் ஒழிப்புப் போராட்ட
போஸ்டரை கிழித்துத் தின்று
அடி உதை வாங்கி
அவதிக்குள்ளான மாடுகள்
கொடிபிடித்து அணிவகுத்து
கோஷங்களுடன் போராட்டக் களத்தில்
புழக் கடையில் பருத்திக் கொட்டை
புண்ணாக்கு போனதெங்கே
களைந்து வைத்த உளுந்தந் தோலும்
கழுவி ஊற்றிய அரிசி நீரும் இல்லாம
காய்ந்து போன பானையாலே நாங்க
கண்டதையும் தின்னும் நிலை
உன் அப்பன் பாட்டன் போல
உழைக்க மறந்ததாலே நீ உண்ண
புழுங்கரிசி நெல்லு சோறு போய்
புதிய வகை அடுக்களைக்குள்
தப்பெல்லாம் உன் பேரில்
தண்டனை மட்டும் எங்களுக்கா?
இணைந்து போராடுவோம்
இறுதி முடிவு எட்டும் வரை
இப்படிக்கு .......மாடுகள்.