பெண்ணே வெளியே வா

பெண்ணே!
சிறகு இருந்தும் சிறைகுள் ஏன்
திறன் இருந்தும் திரைக்குபின் ஏன்
கதவுகள் திறந்தும் குறுகிய வட்டம் ஏன்
வின்னைத்தொடும் காலமே வந்து விட்டது இன்னும்
வீட்டுகுள்ளேயே முடங்கி கிடப்பது ஏன்
பெண்ணே வெளியே வா........!!

குடும்பம் என்னும் தொழிற்சாலையில்
இயந்திரமாக இயங்கும் பெண்களே!
இயந்திரத்திற்கும் உண்டு ஓய்வு ஆனால் உனக்கில்லை!
விடுமுறையே இல்லாத வீட்டுகாரியாகவே இருந்து விடாதே!
சம்பளமே இல்லாத சமயல்காரியாகவே இருந்து விடாதே!
வலியை தாங்கியே பழகாதே கொஞ்சம்
விடியலை தேட பழகு!
பெண்ணே வெளியே வா.........!!

அன்புகாட்ட ஆண்களுக்கு நேரமில்லை
அன்புகாட்டியே பழகிய பெண்களுக்கு தன் அறிவைக்காட்ட நேரமில்லை
பதினாறு செல்வங்களும் வேண்டி பெறுவதோ ஒரு பெண்தெய்வதிடம்!
ஆனால் வீட்டுப்பெண்களின் திறன் ஏனோ முடக்கத்திலே!
அவள் மரியாதை மங்கி கிடக்குது மண்ணுக்குள்ளே!
திறமையில் ஆணுக்கு சமம் அவளே!
சிவனில் பாதியும் அவளே!
பெண்ணே வெளியே வா.........!!

உடையட்டும் சமையலறையின் சிறை பூட்டுகள்
திறக்கட்டும் பெண்ணின் திறமை கண்டு கதவுகள்
சிறை கிளியாய் இருந்தது போதும்
சிகரமாய் வாழும் நேரம் இது
அறைகுள் அழும் காலம் முடிந்தது- நீ
ஆயுதம் ஏந்தும் காலம் இது
பெண்ணே வெளியே வா.........!!

தலைகுனிந்து நடந்தது போதும்
நீ வான் நிமிர்ந்து நடக்கும் காலம் இது!
ஆடவர் ஆணைக்கு அடிப்பணிந்தே கிடந்த காலம் முடிந்தது
அகண்டு கிடக்கும் அண்டம் திறந்துத்தான் கிடக்கு
திறளட்டும் உன் திறன் எங்கும்!
கடமையில் மூழ்கி கனவுகளை தொலைத்த பெண்களே
காத்திருக்கின்றது காலம்! உன் கனவுகள் மெய்பட!...
பெண்ணே வெளியே வா.........!!!

---கயல்

எழுதியவர் : கயல் (19-Oct-18, 4:41 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : penne veliye vaa
பார்வை : 162

மேலே