இடைவெளி

இடைவெளி
===========================================ருத்ரா

கடவுளை வணங்க
கை கூப்பியவர்கள்
கைகளில் எல்லாம்
ரத்தம் தெறிக்கும் வசனங்கள்.
பாபங்களும் தண்டனைகளும் என்று
ஜெபமாலைகள்
உருட்டப்படும் போதெல்லாம்
பச்சைப்பசேலென்று
முளைக்கும் புல் கூட
"அச்சமாய்" முளைக்கிறது.
நான் தான் நம்பிக்கை என்று
கூப்பிடுகிறவரே
இடைவெளியில்
ஏன் இத்தனை
கசாப்புக்களையும்
காயங்களையும்
எங்களுக்கு
பரப்பி வைத்திருக்கிறீர்கள்?

=========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (22-Oct-18, 10:57 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : idaiveli
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே