அந்நிய தேசத்தில் அனாதை
ஆயிரம் அறைகள் கொண்ட
அடுக்குமாடி விடுதிக்கு வெளியே
அடைக்கலம் கொடுக்க ஆளின்றி
அலைந்து தேடுகிறேன் மரத்தை.
பிடித்ததை சாப்பிடும் வழக்கம் மறந்துபோய்,
கிடைத்ததை சாப்பிடும் பழக்கம் மாற்றிக்கொண்டேன்.
வசதியாய் வாழ,
வழியென்று போகவில்லை அங்கு,
அசதியாய் உறங்க ஒழுகாத
ஓட்டை மாட்டவே வழியில்லை இங்கு.
கால்காசு சேர்த்து காரைவீடு கட்டினாலும்,
கட்டினவளை காண கண்கோடி தவமிருக்கும்.
மகன்/மகளின் மழலை ஃபோட்டோ இல்லாத மணிபர்ஸ் இல்லை,
மொத்தமாக அன்பை முத்தமாக கொடுக்க அது போதவில்லை.
நலம் விசாரிக்கும் கைபேசியும்
பலம் இல்லாமல் அழுதுவிடும்.
என்றாவது ஒருநாள் கண்டிப்பாக
எங்கள் வாழ்க்கை மாறிவிடும்..