பங்காளிக்கு பதில் கடிதம்

பிளவுபட்ட இதயங்களுக்கிடையே வெறுப்புகள் ஆர்ப்பட்டம் செய்ய,
பொய்மைகள் இதயங்களுக்கிடையே இடைவெளியை அதிகரிக்க,
அண்ணன் வாழ பொறுப்பில்லா தம்பியும்,
தம்பி வாழ பொறுப்பில்லா அண்ணனும்
நிறைந்த இந்திய சமுதாயங்களில் நிரம்பிவழிகின்றன எத்தனையோ பிரிவுகள் பங்காளி.

ஒன்றிலும் நீதியில்லை,
சகிப்புத்தன்மை இல்லை,
ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை,
துரோகங்களின் கோரதாண்டவங்களில் அனுதினமும் மனம் புழுங்கி எதற்கெடுத்தாலும் பயந்து வாழ்கிறோம் என்தன்பு பங்காளி.

நமக்குள் கலகமூட்டி நம்மை பிரித்து வைத்த ஆங்கிலேயனின் சதிகள் இன்னும் தொடர,
நீயும் நானும் சேர்ந்தால் பாரதம் என்னும் பெரும் இராச்சியத்தை அசைத்துப் பார்க்க எவனால் முடியுமடா பங்காளி.

பகிர்ந்துண்ணும் பண்பு நம்முள்ளே மரித்ததாலே கண்ட நயவஞ்கரெல்லாம் நம்மிடைய பஞ்சாயத்து செய்ய,
நடுக்கடலில் கப்பல் கவிழ இரு பிரிவினர் முயற்சிப்பதைப் போல நீயும் நானும் ஒருவரை ஒருவர் கெடுக்க அழிக்க பழி உணர்ச்சி கொள்வதும் ஏனடா பங்காளி?

சிந்தித்து பார்க்காமல் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறோம் பங்காளி.
இந்த பித்தம் தீர மருந்தென்ன சிந்தித்தே நீ சொல்வாய் எனதன்பு பங்காளி.
சத்தியமேவசெயதே.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Oct-18, 8:30 pm)
பார்வை : 1222

மேலே