“பொன் குலேந்திரன்--- --- நாவல் --- விடிவு இல்லத்துக்கு” விருது-------------“ சென்னை தமிழ் நாட்டில் பொதிகை மின்னல் 19ஆம் ஆண்டு விழா போட்டி---- விருதும், பரிசும் 28 10 2018

அன்புத் தமிழ் வாசகர்களே

“ விடிவு இல்லத்துக்கு சென்னை தமிழ் நாட்டில் பொதிகை மின்னல் 19ஆம் ஆண்டு விழா போட்டிஎழுதிய “விடிவு இல்லத்துக்கு சென்னை தமிழ் நாட்டில் பொதிகை மின்னல் 19ஆம் ஆண்டு விழா போட்டியில் விருதும், பரிசும் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்
யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்” தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். கனடா பிரஜையான பொன் குலேந்திரன் சிற வயது முதற் கொண்டே எழுதத் தொடங்கியவர். “குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்துபவர். கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார். பீல் மிசிசாகா முது தமிழர் சங்கத்தில் ஐந்து வருடங்கள் தலைவராக இருந்தவர் ஆங்கலத்திலும் தமிழிலும் எழுதக் கூடியவர். ஆங்கிலத்தில்: Short Stories from Sri Lanka, The Dawn (Novel), Sufferings of Innocent Souls (HR Violations in Sri Lanka), Hinduism a Scientific Relgion, Strange Relationship (21 Short stories) அகிய நூல்களையும் தமிழில்: விசித்திர உறவு (சிறுகதைத் தொகுப்பு), அழகு (சிறுகதைத் தொகுப்பு), அருவி (கவிதைகள்), வளரும் வணிகம் , அறிவுக்கோர் ஆவணம், கோபுர தரிசனம், கோடி புண்ணியம்,பார்வை (21 சிறுகதைகள்) அடங்கிய மின்நூல் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். முகங்கள் இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. தற்போது ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் வாழும் இவரோடு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் -

தமிழர் செந்தாமரையில் தொடர்கதையாக பல வாரங்கள், கவிஞர் வ கந்தவனம் அவர்களின் அணிந்துரையோடு,
எழுதிய “விடிவு இல்லத்துக்கு சென்னை தமிழ் நாட்டில் பொதிகை மின்னல் 19ஆம் ஆண்டு விழா போட்டியில் விருதும், பரிசும் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்


விழா நாள் : October 28 2018

இடம் மின்னல் கலைக்கூடம் , 117 எல்டாம்ஸ் ரோடு , சென்னை 600018 ,தமிழ் நாடு , இந்தியா

காலம் : இந்திய நேரம் மாலை 5 மணி

அனைவரும் வருக

வேலாயுதம் ஆவுடையப்பன்

எழுதியவர் : (24-Oct-18, 5:00 pm)
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே