தீபாவளி திருவிழா
வீதி எங்கும் விண்மீன் பூத்திருந்தது..
நாசி எங்கும் நறுமணம் கமழ்ந்தது...
பூக்காத மரமும் பூத்துக் குலுங்கியது...
மழையும் ஏனோ பன்னீர் தூவியது...
இயற்கையில் ஏன் இந்த மாற்றம் எனப் புரியவில்லை
வெங்கல சிலை கணக்கா வெளியில் வந்தவளை பார்த்தேன்..!!
ஆம்...!!!
விடுதியில் தங்கிப் படித்தவள்- தீபாவளி
விடுமுறைக்கு வீட்டிற்கு வாந்திருக்கிறாள்.