தித்திக்கும் தீபாவளி

தீய எண்ணங்களுக்கு தீயூட்டுவோம்
தீர ஆலோசித்து, தீர்மானம் எடுப்போம்
ஒன்று படுவோம், ஒற்றுமையுடன் போராடுவோம்
ஊழல் இல்லாத, ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவோம்
பொறாமை, சூழ்ச்சி, பழி தீர்க்கும் எண்ணங்கள், சரவெடி போல் வெடித்து சிதறி , நம் மனதை விட்டு நீங்கட்டும்
அன்பும், நட்பும், சகோதர பாசமும், புஸ்வானம் போல் பொங்கி, சக்கரம் போல் பரவி, ராக்கெட் போல் சீறி, விண்ணை நோக்கி பாயட்டும்
தித்திக்கும் தின்பண்டங்கள் கொடுப்போம்
தீபங்கள் ஏற்றி, இறைவனை வேண்டுவோம்
சொந்தமும், நட்பும் கூடி, தீபாவளியை கொண்டாடுவோம்

எல்லோர்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அன்புடன்
பாரதிகேசன்

எழுதியவர் : பாரதிகேசன் (5-Nov-18, 4:36 pm)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 141

மேலே