ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடியில் ஆரம்பித்து
குடியில் முடிகிறது
குடிகாரர்களின் தீபாவளி !

போதும் சிலை வைத்தது
போக்குங்கள்
வறுமையை !

வேகம் விவேகமென்று
நூறில் சென்றவன்
நூற்றி எட்டில் செல்கிறான் !

ஏறும்போது ரூபாயில்
இறங்கும்போது பைசாவில்
பெட்ரோல் விலை !

நியாயம் பேசும் நடிகரின்
திரைப்படக் கட்டணம்
மூன்று மடங்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Nov-18, 7:27 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 181

மேலே