அசா கசா

என்னங்க பாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கசகசான்னு சொன்னீங்க. கொழம்புக்கு அரச்சு ஊத்த கசகசா வேணுமுங்களா?
@@@@
நான் எப்படி கசகசான்னு சொன்னேன்.
@@@@
எங் காதுல கசகசான்னுதான் கேட்டுதுங்க பாட்டி.
@@@@
கசகசா இல்லடி கண்மணி. அசா கசான்னுதான் சொன்னேன். எம் பேத்தியப் பாக்க அவகூடப் படிக்கற புள்ளையும் அவளோட அப்பனும் வந்தாங்க. அவுங்க ரண்டு பேரும் அடிக்கடி எங்க ஊட்டுக்கு வருவாங்கடி.
@@@@
அது சரி. அசா கசா-ன்னா என்னங்க பாட்டி.
@@@@
அவகூட படிக்கற புள்ள பேரு கசா. அவ அப்பன் பேரு அசா.
(பாட்டியின் பேத்தி செல்வி
வீட்டுக்குள்ளிருந்து வந்து)
அடியே கண்மணி, என் வகுப்பு தோழி பேரு கஜா. கஜான்னா யானை. அவ அப்பா பேரு அஜா. அஜா-ன்னா 'பிறக்காத', 'சுயம்பாக இருக்கும் ஒருவர்'ன்னு அர்த்தம்.
@@@@
பரவால்லடி செல்வி. உங்கூடப் படிக்கிற அந்தக் கசாவும் நல்லா குண்டா சித்தானை மாதிரி தான் இருக்கிறா.
@@@@
பாட்டிம்மா. அவ ரொம்பத் தங்கமான பொண்ணு. எங்கூட நல்லாப் பழகற இந்திக்காரப் பொண்ணு அவ. அவ நம்ம நகரத்திலயே பொறந்து வளந்தவ. நம்ம மாதிரியே நல்லாத் தமிழ்ல பேசுவா.
@@@@
சரி.சரி. இன்னும் ரண்டு நாளுக் கழிச்சு கசாப்(யானைப்) புயல் வருதாம். உன்னோட படிக்கிற கசா (யானை) அடுத்த வாரத்துக்குத்தான் வரும்.
@@@@
என்னங்க பாட்டிம்மா எப்ப பாத்தாலும் பேருங்களை எல்லாம் கிண்டல் பண்ணீட்டு இருக்கறீங்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Aja = unborn, one who is self existent.

எழுதியவர் : மலர் (12-Nov-18, 9:29 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 89

மேலே