வெட்ட விடாதே மரத்தை

துளிர்க்கும் இலையே
உனக்கு தெரியாது
நீ மரமா மலர மாட்டிற்கு இறைய
மனிதனின் வீட்டில் ஒரு செடியா

மண்ணில் விழும் அனைத்து விதையும்
வளர்ந்து நீண்டு நிற்பதில்லை
சில விதைகள் விதைக்கும் முன்னரே
வீணாகி விடுகிறது
பல விதைகள் மண்ணை தொட்டதும்
வளர தொடங்குகிறது

புவியின் விசையை எதிர்த்து வளரும்
அனைத்து விதையுமே
வெற்றியாளனே

காயோ கனியோ நிழலோ
எதோ ஒன்று தந்து
எங்கும் இருக்கும்
மரத்தினை வெட்டுவது தப்பு

பல வருடம் வளர்ந்து
பல கிளைகளை கொண்ட மரணத்தினை
சில நிமிடத்தில் அகற்றி
அதற்கு ஈடாய்
சின்ன சின்ன கன்றுகளை நடுவது நியமில்லை

மரம் வளர்ப்போம்
வளர்ந்த மரங்களை காப்போம்

எழுதியவர் : நிஷாந்த் (21-Nov-18, 2:22 pm)
சேர்த்தது : nishanth
பார்வை : 4851

மேலே