விந்தைதரும் இயற்கை
நாயொன்று நான் பார்த்துக்கொண்டே இருக்கையிலே ,
அதற்கு உடலில் ஏதோ உபாதை ,
ஓடிப்போய் அந்த பூங்காவின் ஓரத்தில்
மழைக்குப்பிறகு அமோகமாக வளர்ந்திருந்த
அருகம்புல்லை அப்படியே வாயால் கவ்வி தின்றது ;
சிறிது நேரம் அந்த நாயையே நான் கவனித்தேன்
உபாதை முற்றும் காணாமல் போனதோ
அங்கிருந்து குஷியாய் ஓடிச்சென்றது !
இப்படித்தான் ஒருமுறை என் வீட்டின் பக்கத்து
புதரிலிருந்து ஓர் கீரிப்பிள்ளை -
வாயில் ரத்தம் ......பாம்போடு பொருதி
அதைக்கடித்து கொதறி கொன்றுவிட்டு வந்ததோ?
அங்கு வளர்ந்திருந்த 'சிரியாநங்கை செடியை நாடி
போனது , செடியின் இலையை சிறிது கடித்து தின்றது
பின்பு அங்கிருந்து ஓடிவிட்டது , பாம்பின் விடம்
கீரியை ஒன்றும் செய்யவில்லை
கீரி அறிந்திருந்தது , சிறியாநங்கை அந்த விடத்தின் மாற்றுமருந்து என்று!
காலையில் நடைப்பயிற்சி , தெரு ஓரம் சென்றுகொண்டிருந்தேன்
அங்கு ஒரு பாதாமி மரம்
பச்சை பசேலென்று மரம் முழுதும்
பெரிய இலைகள் , கிளைகளெல்லாம்
காய்த்திருந்தன சிவந்த பாதாமி பழங்கள்
எங்கிருந்தோ அந்த மரத்தில் வந்தமர்ந்து
ஓர் பச்சைக் கிளி ஒன்று, தன கூறிய வளைந்த
அலகால் சில பழங்களைக் கொத்தி பதம்பார்த்து
தின்றது, ஒரு பழத்தை அலகால் உடைத்து
அதின் உள்ளிருந்த பாதாமியை தின்றது ...
நான் நினைத்தேன் இந்த பறவைகள்தான்
நமக்கு இவற்றை தின்ன கற்றுத்தந்ததோ என்று !
இந்த நாய், கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை
இவைகளுக்கு யார்தான் கற்று தந்தாரோ
இப்படி தம்மை பாதுகாத்துக்கொள்ள .....
இயற்கை ?............ இயற்கை இறைவனின் படைப்பல்லவா !
என்னே இந்த விந்தை தரும் இயற்கை !
இப்படியே பார்த்துக்கொண்டும், ரசித்துக்கொண்டும்
வந்த நான், திரும்பி வீட்டருகே வருகையில்
நேற்று நான் ஒரு கவளம் உணவு தந்த தெரு நாய்
என்னை கண்டுகொண்டு ,வாலாட்டிக்கொண்டே
வந்து என்னருகே நின்றது.......
என்னென்பேன் இந்த வாயில்லா ஜீவனின் நன்றி
உணவளித்தவரையே மறந்து வாழும்
மனிதர்வாழ் உலகிலே!