தோழிச் சொல்

அன்பின் இலக்கணம் அன்று
கையறுத்த அரிவாள் இலக்கணமாய் இன்று !

கற்றோர் இலக்கணம் அன்று
தெருக் கலவியின் இலக்கணமாய் இன்று !

மழலை சொல்லின் வாய் இலக்கணம்
அன்று - மாற்றான்
சொல் இலக்கணமாய் இன்று !

பூவான இலக்கணம் அன்று
முள் கூந்தல் இலக்கணமாய் இன்று !

காவிய இலக்கணம் அன்று
அசிங்க சொல் இலக்கணமாய் இன்று !

ஆனந்த கண்ணீர் இலக்கணம் அன்று
உமிழ்க் கண்ணீர் இலக்கணமாய் இன்று !

பனை மாற நட்பிலக்கணம் அன்று
சீமைக்கருவேல நட்பிலக்கணமாய் இன்று !

ஆசை வார்த்தை இலக்கணம் அன்று
படுகொலை வார்த்தை இலக்கணமாய் இன்று !

உந்தன் மறுப்பு
நூல் அறுத்த ராட்டை இலக்கணமாய் இன்று !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (23-Nov-18, 12:28 am)
பார்வை : 369

மேலே