பூக்கோலங்கள்
அய்யராத்துப் பொண்ணு
கோம்ஸ் பிறந்தது
நவம்பர் இருபத்தொண்ணு...
படிப்பதில்... படிப்புச்
சொல்லிக் கொடுப்பதில்
இவர் நம்பர் ஒண்ணு...
கோம்ஸ் நல்லதொரு
தமிழ்ப் பெண்மணி...
இவர் பிறந்த கல்லிடை
ஓடுவது தாமிரபரணி...
இவரது மாணவர்களாலும்
சிறந்து செழிக்கும் ஒட்டு
மொத்தத் தரணி...
இந்தியக் கலாச்சார
ஆடைகள் அணிவதில்
நல்ல ஆர்வலர்...
குயில் குரல் கொண்டு
பாடுவதில் நல்ல பாடகர்...
கல்வி கற்றுத் தருவதில்
நல்ல வித்தகர்...
இவரது கலை ஆர்வத்தில்
மூக்கின் மேல் விரல்
வைப்பர் மற்றவர்...
நெல்லை ஜிஸிஇ யில்
மண் பார்த்து நடந்தார்
புத்தகங்கள் அதிகம்
படித்து வளர்ந்தார்...
அதனால்தான் என்னவோ
பல்கலைக்கழகங்கள்
இவரைப் பார்த்து வளர்கின்றன...
இவர் வரையும்
மின்னணுவியல் சமனச் சுற்றுகள்
மாணவர்களுக்கு பூக்கோலங்கள்...
மின்னணுவியலில் முனைவர்...
நல்ல மாணவர்களை உருவாக்க
இவர் என்றும் முனைவார்...
எல்லோருக்கும் லப்டப்
என இதயங்கள் துடிக்கும்...
இவருக்கோ அது
ராம்ஸ்... விக்கி என
அன்பாய்த் துடிக்கும்...
எதிலும் நேர்த்தி
இவருக்குப் பிடிக்கும்...
அதனால் உற்றார் உறவினர்
நட்புகளுக்கு இவரை
மிகவும் பிடிக்கும்...
அறிவு அழுத்தம்
அதிகம் இருந்தாலும் கோம்ஸ்
கஜா புயலாய் இல்லாமல்
கல்லிடைத் தென்றலாய் இருப்பதால்
மாணவர் உலகம் இவரை நேசிக்கும்...
பாடங்களை அக்கறையாய் வாசிக்கும்...
தோழி கோம்ஸ்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
👍🌹🌺🌷🍰🎂👏🎧🎤🎻