உடலை கருவியாய்
எண்ணங்களுக்கு
தினம் பல
வண்ணங்களை
வாரி வாரி
பூசிக்கொள்ளும்
விட்டில்
மனித உலகம்.
சொல்லுக்கும்
செயலுக்கும்
தொடர்பின்றி
பொய்யுக்கும்
புரட்டுக்கும்
புகழ் சூட்டி
மெய்யுக்கும்
உயிருக்கும்
அழிவு சேர்க்கும்
அரக்க உலகம். . . . .
அன்புக்கு
விலை வைத்து
அறிவை விற்று
உடலை
கருவியாய்
உருவாக்கி வரும்
வியாபார உலகம்.
உணவை நஞ்சாக்கி
உறவை பொய்யாக்கி
உதிரத்தை நோயாக்கி
பசியை பொய்யாக்கும்
பகட்டு உலகம்.