பண்பட்ட உயிர் கூடாய்
ஆசையே துன்பத்திற்கு
ஆசான்
அனைவரும் அறிந்ததே
ஆசை இல்லாத
மனிதன் இல்லை
ஆசையை வென்றவர் உளர்
ஆசையை வென்றிட
ஆசைக்கு
அணை போடாதே
ஆசை
அடங்க மறுக்கும்
அத்துமீறும்
அத்தனைக்கும்
அனுமதி கொடு
மனதின் ஆசை
இதுதான் என்றால்
மது அருந்து
மாமிசம் தின்னு
களவு கொள்
இதைவிட வேறு
என்ன ஆசை வரும்
அதற்கும் அனுமதி கொடு
ஆசையின்
ஆழம் கண்டுவிடு
திகட்டத்திகட்ட
அனுபவி
அப்போது மனதிடம் சொல்
இது நிரந்தரமல்ல
உன் நிராகரிப்பில்
நிலையானதை நோக்கிய
பயணம் தொடங்குமென்று
தொடங்கும் முன் வரை
முமுமையாக
விரும்பி செய்
ஆசைக்கு
அசைபோடு
ஆசையை
அனுபவித்து
அலைந்து திரிந்து
அடங்க நினைக்கும் மனதுக்குள்
அறிவை செலுத்து
ஆழ உழு
ஆசை அகலும்
ஆன்மா விழிக்கும்
பற்று விலகும்
பார்வை தெளிவாகும்
பாதை தெரியும்
பயணத்தைத் தொடங்கு
பண்பட்ட உயிர் கூடாய்