புலிக்கு பிறந்தது பூனையாகுமா

சமூக சேவகி உமையாம்பாள்க்கு சிறந்த சமூக சேவகி என்ற விருது வழங்கி பாராட்டும் விழா . மேடையேறிய பிரபலங்கள் எல்லாம் உமையாம்பளை புகழ்ந்து தள்ளினார்கள்.உமையாம்பாள் ஏழைக் குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்டவர் .அனாதைக் குழந்தைகளை தன் சொந்தக் குழந்தையாகவே அரவணைத்துக் கொள்வார் உமையாம்பாள்.தெருவில் திரிந்து கொண்டிருக்கும் அனாதைக் குழந்தைகளை கண்டுபிடித்தி குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விடுவார் உமையாம்பாள். உமையாம்பளை மற்றுமொரு அன்னை தெரசா என்றால் அது மிகையாகாது.கை தட்டல்களால் மண்டபம் அதிர்ந்தது.அந்த நேரத்தில் இரண்டு காவலர்கள் உமையாம்பள் பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சரின் காதில் வந்து ஏதோ கூறினார்கள். உடனே அமைச்சர் உடனே எழுந்து ஒரு நிமிடம் எனக் கூறி மைக்கைப் பிடித்து செல்வி இலட்சனா வாழ்க எனக் கூறினார்.உமையாம்பாள் அதிர்ந்து அவரை பார்த்தாள்.தன் தாய் உமையாம்பளைப் போன்றே இலட்சனாவும் சிறந்த சமூக சேவகிதான்.ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான அவள் இன்று மாலை பள்ளி விட்டு காரில் வரும்போது வயதான கிழவர் அடிப்பட்டு உயிருக்கு போராடுக் கொண்டிருந்தார்.யாரும் அவரை பொருட்படுத்தவில்லை.ஆனால் இலட்சனா காரை ஓட்டுனரிடம் சொல்லி நிறுத்தி அவரை தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவர் உயிரை காப்பாற்றியுள்ளார்.அவள் உயிர் காப்பாற்றிய மனிதர் விடுதலை போராட்ட தியாகி ஆவார் .மகளும் இந்த சிறு வயதிலேயே சிறந்த சமூக சேவகியாக மாறியுள்ளார் எனக் கூறி பேச்சை முடித்தார்.கைதட்டல்களால் மண்டபமே மிக அதிர்ந்தது." தாய் எட்டடி பாய்ந்தால் " குட்டி பதினாறு அடி பாயும் என்பது பொய் இல்லையென்பதை கண்கூடாக நாம் பார்கிறோம்" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா".....என்று தன் மகள் இலட்சனா பாராட்டப்படுவதை கண்கள் கலங்க பார்த்து கொண்டிருந்தாள் உமையாம்பாள் "

எழுதியவர் : உமாபாரதி (28-Nov-18, 7:52 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 149

மேலே