Thanimai

கல்லூரி பேருந்தில்
சன்னலோரத்தில் அமர்ந்தவாறு
நான் ஒருவள் மட்டுமே
தனியாக செல்ல
இவள் அமைதியான பெண்ணோ....
யாரிடமும் பேசமாட்டேங்கிறா
என யாரோ சொல்ல
என் காதில் வாங்கும்போது
சிரிப்பு வந்தது எனக்கு
அவர்களுக்கு தனியாள்......
ஆனால்,
யானோ சாலைகளில் உள்ள
மரங்களுடன் பூக்களோடு
தோழமையுடன் பேசுகிறேன்....
அவர்களிடம் மகிழ்கிறேன்
இவர்களிடம் பெறவில்லை அதனை
மௌனமே எனக்கு
வலிமை.......
நான் தனிமையில்
வாழவில்லை....
ரசிக்கிறேன்!!!!!
என் உலகத்தை.........!!!!!

எழுதியவர் : Sangee (1-Dec-18, 11:20 am)
சேர்த்தது : Sangee
பார்வை : 273

மேலே