பூவின் புரட்சி

ஏற்றிய​ தீபமும் எரிமலையாய்
குமுறட்டும்..!

விழுகின்ற​ மழையும் வெண்ணீராய்
தெரிக்கட்டும்..!

வீசுகின்ற​ காற்றும் அணல்காற்றாய்
மாறட்டும்..!

இரவின் நிலவும் தனைஎரித்து
சாகட்டும்..!

காலை கதிரும் எழ மறுத்து
தூங்கட்டும்..!

பொங்கும் கடலும் துளி நீரின்றி
வற்றட்டும்..!

நெஞ்சில் எழுதி வைத்து
நினைவில் சேர்த்து வைத்த

“கணவை”

வெப்ப​ காற்று அழிக்குமா..?
கொதிக்கும் அணல்தான் சிதைக்குமா..?

பூமி உடைந்து போனாலும்..!
பூக்கள்
வாசமின்றி பூத்தாலும்..!
உழைக்கும்
வேகம் தீர்ந்து போகாது..!

நெஞ்சம்
நினைத்த யாவும் முடியாமல்
என்
நீண்ட பயணம் முடியாது..!

சுற்றும்
புவியே ஓய்ந்து போனாலும்
என்
புரட்சி என்றும் ஓயாது..!

எழுதியவர் : ராகசுதா ரனதேவ் (2-Dec-18, 6:47 pm)
சேர்த்தது : Ragasudha
Tanglish : poovin puratchi
பார்வை : 1844

மேலே