இறுதியில் உன் நினைவு

நேரும் என்று இருக்க
இருந்த வலிகள்
தன்னுள் கலைந்து
தானும் கலைந்தது.
எங்கோ எரியும் நெருப்பில்
கண்கள் குளிர் காய்ந்தன.
காற்றில் ஓடிய
வெள்ளி உயிரில்
இன்னும் உன் ஞாபகம்.
வழிகளில் கிடைக்கும் ஒவ்வொரு
எதேனுமொன்றில் ஏதேனும்
இருக்கும் உன் நினைவு.
குளிரும் தனிமையில்
நீங்காது நிற்கும் உன்
சேலை வாசனை
பட்டுப்போன மனதில்
பட்டாம்பூச்சியாய்...

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Dec-18, 7:13 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 203

மேலே