பார்த்துப் போ--- நையாண்டி மேளம் 2

பார்த்துப் போ


வீட்டிலிருந்து புறப்படுகையில்
அன்னை எச்சரிப்பு ;

தெருவில் நடக்கையில்
நண்பன் ;

சாலை கடக்கையில்
முகம் தெரியாத பெரியவர் ;

யாவரும் உரைக்கின்றார்
பார்த்துப் போ

புன்னகையோடு பேருந்தில் ஏறி
அமர்ந்த கொஞ்ச நேரத்தில்

குலுங்கி நின்றது வண்டி
ஒரு விபத்தின் பரபரப்போடு .

கண்ணில் வழியும்
வேர்வையைத் துடைத்து

மடித்த அலுமினிய
ஊன்றுகோலைத் தடவுகையில்

மீண்டும் புன்னகை --

நீங்களும்
பார்த்துப் போகக் கூடாதா !

எழுதியவர் : Dr A S KANDHAN (4-Dec-18, 9:11 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 56

மேலே