கருவிலே களைந்திருந்தால்

கருவிலே களைந்து போக
வரத்தை ஒன்றை பெற்றிருந்தால்
காலந்தோறும் பெறுகின்ற
ஈன நிலை அற்றிருக்கும்
தாலால் தினம் பேசி பேசி
தாளில் விழச் செய்கின்ற
தரமாறிய மனிதர்களின்
தயாள குணத்தை தவிர்த்திருப்போம்
தர்மம் என்ற நற்சொல்லை
தடமாறச் செய்கின்ற
தங்க நிகர் தலைவர்களையோ
பெருத்த கொங்கை கொண்ட
பெண்டீரின் ஆளுமையையோ
பெறாமல் இருந்திருப்போம்.

எழுதியவர் : நன்னாடன் (5-Dec-18, 9:50 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 80

மேலே