முத்தங்கள்
முத்தமிடுதல்
ஒன்றே தான் இலக்கு போல
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு முத்தத்தையும்
கொட்டி விட்டு தான் நிற்கிறது
விட்டு விட்டு முத்தமிடுதலும்
இடைவெளியின்றி முத்தமிடுதலும்
லேசாகா முத்தமிடுதலும்
மிதமாக முத்தமிடுதலும்
பலமாக முத்தமிடுதலும்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்
காலத்தை பொருத்தே
முத்தமிடுதல் மட்டுமே உரிமையின்றி
முத்தம் பெறுதலுக்குக்கு
அனுமதி மறுப்பதால்
ஆதங்கமும் அதிகம்தான்
முத்தமிடுதலில் ஏற்படும்
ஈரத்திற்கும் ஈர்ப்புக்கும்
வெட்கத்துடன் விலகுவதும்
ஒரு சுகம் தான்
முத்தமிடுதலால் நிறைகிறது
உலகம் எனவே
முத்தமிடுதல் இங்கே
மிக மிக அவசியம்
எனும் உண்மையை உணர்ந்தது போல்
தவறாமல் முத்தமிட்டு செல்கிறது
மேகம்
முத்தத்தை மழையாய்
பூமிக்கு . . .

