புகழ்

வண்ண வண்ண மைகளைக்கொண்டு
சித்திரம் தீட்டுகின்றேன் என்று துவங்கும்
ஓவியன் அவன் சித்திரம் தீட்டும்போது
தற்செயலாய் கையிலிருந்த மையை
அங்கும் இங்கும் சிதறவிட .......அங்கு
அவன் வரையும் சித்திரத்தைப் பார்க்க
திரண்டுவந்து ரசிகர் கூட்டம் அந்த
சிதறிய மைகளின் கூட்டில் முளைத்த
ஓவியன் அறியா சித்திரத்தை வானளவு மெச்ச
ஓவியனும் ஒரே நாளில் ஓவிய மேதையாகிறான்
அவனுக்கே தெரியாது ஏன் எப்படியென்று

சிலர் வாழ்க்கையிலும் இப்படித்தான்
அவர்கள் கேட்காமலே அவரறியாமல்
புகழ்வந்தடைந்து வானேற தூக்கிவிடும்
சில கிறுக்கல்கள் பெரும்பாக்களாய்
அமைந்து கவியை பெரும் கவியாய் மாற்றிவிடுவதுபோல்

இதை அதிருஷ்டம் என்று கூறினால்
பகுத்தறிவாதிகள் என்னென்று கூறுவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Dec-18, 4:46 pm)
Tanglish : pukazh
பார்வை : 127

மேலே