நட்பு

நான் பேசிய பேச்சிற்கும்
என் செய்கைகள் அனைத்திற்கும்
தலையசைத்து கைதட்டி
என்னை நிழல்போல் தொடர்ந்தான் ஒருவன்
என்னிடம் செல்வம் கொழித்திருந்தபோது
நான் அவனோடு சேர்ந்து என்னை,
நான் செய்யும் செயல்கள் சரியா தவறா
என்றுகூட பார்த்திடாமல் என்னை ஆதரித்த குழாம்
என் மனதில் மேகத்திரையாய் என் உள் மனதை மறைத்திருக்க
மதி மயங்கி, மதி இழந்து நான்
என் போக்கு சரியில்லை என்று தட்டிக்கூறி
என் பாதை சரி இல்லை என்ற உயர் நண்பன் பேச்சிற்கு
கொஞ்சம்கூட செவி சாய்க்காது இப்புது நண்பர்கள்
வலையில் வீழ்ந்தேன் .............எல்லாம் இழந்து
வறுமைக்குழிக்கு தள்ளப்படும் தருணத்தில் விழித்துக்கொண்டேன்
அப்போது திரும்பி பார்த்தேன் புதிய நண்பன்,
அவன் குழாம் நேற்றுவரை என்னை நிழலாய்த் தொடர்ந்த அவர்கள்
காணாமல் போனார்கள் அவர்கள் நிழல் கூட காணாது
கிணற்றில் வீழ்ந்த யானையைக் காப்பாற்றியவன் போல்
என்னை நான் அறியாமல் என் செயல்களை கவனித்துவந்த
என் அந்த நண்பன் கைகொடுத்து காப்பாற்றினான்
வெட்கத்தால் தலைகுனிந்து நான் சொல்ல நாவெழாமல்
கண்ணீர் ஆராய்ப்பெருக்க என் நண்பன் கைகளில்
விக்கி விக்கி அழுதவாறு .........................

நீ செய்யும் செயல்களில் குறை இருந்தால் தவறிருந்தால்
தயங்காது உன்னை விமரிசிப்பவனே உயர் நண்பன்
உண்மை நண்பன் ......................நட்பு நாடும்போது
நண்பன் தரத்தையும் பார்த்து பழகுதல் வேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Dec-18, 8:04 pm)
Tanglish : natpu
பார்வை : 1286

மேலே