செந்திலாண்டவரை ஆண்டவர்

செந்திலாண்டவர் பாலிடெக்னிக்
கல்லூரி ஆண்டவர்...
சேர்மன் திருமிகு.மாடசாமி...
இது எங்களுக்கு ஒரு
பெயர் மட்டுமல்ல...
எங்களோடு கலந்துவிட்ட
உணர்வு... உத்வேகம்...

எண்பதுகளில்...
தொழில் நுட்பக் கல்வி
வளர்ந்திரா வருஷங்களில்...
தென்காசி பகுதி
மாணாக்கர் நலம்பெற
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி
அமைத்துத் தந்தவர்...
பொறியாளர் பலர்
உருவாகச் செய்தவர்...

பள்ளிப் படிப்பில் அதிக
மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே
பாலிடெக்னிக் கல்லூரிகளில்
இடம் என்றிருந்த காலத்தில்
குறைந்தபட்ச மதிப்பெண்கள்
பெற்ற மாணவர்களையும்
கல்லூரியில் சேர்த்து
அதிகபட்ச மதிப்பெண்கள் பெற
ஆவன செய்தவர்...

பிறப்பால்.. தான் இந்து
பழக்க வழக்கங்களால் இஸ்லாம்
படித்தது கிறித்தவ பள்ளிகள்...
என தன்னை அறிமுகப்படுத்திக்
கொள்ளும் எங்கள் சேர்மன்
சொல்லிய கல்லூரிப் பெயர்க் காரணம் சுவாரசியமானது...
அது மிக வசீகரமானது...

*'அருள்மிகு'* என்பது தனது
ஆசிரியர்... கிறித்தவர்
அருள்பிரகாசம் என்பவரையும்...
*'செந்தில்'* என்பது முருகப் பெருமானையும்
*'ஆண்டவர்'* என்பது அல்லாவையும்
குறிக்கும்... அதனால்
அருள்மிகு செந்தில் ஆண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி
பெயர் வைத்ததாய்ச்
சொல்லி மகிழ்ந்தவர்...
எம்மதமும் சம்மதமாய்
வாழ்ந்து காட்டியவர்...

ஆசிரியர்கள் ஊழியர்கள்
மாணவ மாணவியர்
தென்காசிப்பகுதி மக்களின்
தேவைகளுக்கு உதவிக்கரம்
நீட்டியவர்... சமூகத்தில்
நல்ல பெயர் ஈட்டியவர்... என்றும்
அழியாப் புகழ் நாட்டியவர்...

இருநூறு ஏக்கர் விவசாயி...
இருந்தும் ரப்பர் பாதணிகள்
அணிந்த எளிமைவாதி...
காந்திய சிந்தனை கொண்ட
சுபாஷ் சந்திரபோஸ்...

விவசாயம்... கல்லூரிப்பணி...
சமூக சேவையில்
நேரம் பார்க்காமல்
பணிபுரிந்த எங்கள் சேர்மன்
நேரம் பார்க்க என்றும்
கடிகாரம் அணிந்ததில்லை...

வெள்ளை ஆடை அணிந்து
வெள்ளை உள்ளம் கொண்டு
வள்ளல் குணம் பெற்றவர்...
கல்வி வள்ளல் எனும்
பெயரும் பெற்றவர்...
மனிதநேயம் கொண்டு
வாழக் கற்றவர்...

ஏழைகள்.. விவசாயிகள்..
தொழிலாளிகளின்
கஷ்ட நஷ்டங்களை அறிந்தவர்...
கல்விக் கட்டணம்
பாக்கி வைத்திருந்தாலும்
மாணவர்கள் தேர்வுகள் எழுதத்
தடை விதித்ததில்லை...
பெற்றோர் மாணவர்களை
மனம் வருந்த விட்டதில்லை....

பெற்றோர் உட்பட
கல்லூரிக்கு வரும் எல்லோரையும்
விருந்திட்டு வழியனுப்பும்
விருந்தோம்பல் செய்தவர்...
விருந்தினரின் வயிறு
நிறைந்த போதெல்லாம்
இவருக்கு மனசு நிறைந்தது...

கருத்துச் செறிந்த
சேர்மனின் உரையாடல்கள்
தென்றலின் இனிமையினும்
இதமாய் இருக்கும்...
சில நேரங்களில்
புயலையும் புரட்டிப்போடும்...

சேர்மனோடு பழகியிருந்த காலங்கள்...
அது சந்தனக் காட்டில்
நந்தவனம் அமைத்து அதில்
குற்றாலக் குளிர் தென்றல்
வீசினாற் போன்ற
வசந்த காலங்கள்...

அமைச்சர்களிடம் ஆலோசித்து
அரசாங்கம் அணுகி
பாலிடெக்னிக் படிக்க
எஸ்.எஸ்.எல்.சியில்
குறைந்தபட்சம் மதிப்பெண்கள்
கணிதம் அறிவியலில்
நாற்பது நாற்பது
மொத்தம் நூறு வேண்டும்
என்ற நிலை மாற்றி
முப்பத்தைந்து முப்பத்தைந்து
மொத்தம் எழுபது எடுத்தால்
பாலிடெக்னிக் சேரலாம்
எனும் அரசாணையும்
வயது வரம்பு தளர்த்திய
அரசாணையும் பெற
வழிவகை செய்தவர்...
மாணவர்களுக்கு
ஒளிமயமான எதிர்காலம்
உருவாக்கிய பெருந்தகை இவர்...

இதனால் டிப்ளமா பொறியாளர்
எண்ணிக்கை மட்டுமா உயர்ந்தது
பாலிடெக்னிக் கல்லூரிகளின்
எண்ணிக்கையும் அல்லவா
உயர்ந்தது... தொழில்
வளம் இன்னும் உயர்ந்தது...

பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பொறியாளர்களும்
பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பும்
எளிதாய்க் கிடைத்தது...
கிராமத்துப் பொருளாதாரம்
சீராய் வளர்ந்தது...

அரசுப் பொறியியல் கல்லூரிகளில்
பகுதிநேரப் பொறியியல்
பட்டப்படிப்பு சேர்வதற்கு
அறுபது கிலோமீட்டர்
தொலைவு வரம்பை
தொண்ணூறு கிலோமீட்டராய்
உயர்த்த அரசு ஆணை
பிறப்பிக்க கருத்துரு அனுப்பினார்...
அரசாணையும் பெற்றுத் தந்தார்...
பகுதி நேரப்படிப்பால்
தொழில் நுட்பக்கல்வி
ஆசிரியர்கள் தம்
கல்வித்தகுதி வளர்த்துக் கொண்டனர்...
கற்பித்தலில் புகழை
மேலும் சேர்த்துக் கொண்டனர்...

மகாகவி பாரதியாரை
சேர்மனுக்கு மிகவும் பிடிக்கும்..
அவர் எழுத்தால் எழுதியதை
இவர் செயலால்
செய்து காட்டியவர்...
நீதி உயர்ந்தமதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள்
மேலோர் என்பதற்கிணங்க
வாழ்ந்து காட்டிய வள்ளல் இவர்...

கார்த்திகையில் பிறந்ததால்
முருகப் பெருமானும்...
டிசம்பரில் பிறந்ததால்
இயேசுபிரானும்...
ரப்யூலவலில் பிறந்ததால்
புனித அல்லாவும்...
அருள்புரிந்து ஆசீர்வதிக்க
பேரோடும் புகழோடும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார்...

டிசம்பர் ஐந்து
அவரது பிறந்தநாள்...
சேர்மன் திரு. மாடசாமி
அவர்கள் காட்டிய வழியில்
மேலாண்மை செய்வோருக்கும்
மாணவ மாணவியருக்கும்
ஆசிரியர் ஊழியருக்கும்
வசந்தங்கள் வரமாகும்...
வெற்றிகள் வசமாகும்...
சரித்திரம் உருவாகும்...

அன்புடன்
ஆர்.சுந்தரராஜன்,
முதுநிலை முதல்வர்
மற்றும் ஆலோசகர்,
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி,
தென்காசி.
🌹🌷🌺👍👏🎂🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (8-Dec-18, 7:43 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 133

மேலே