வெண்ணிலா...

இடுப்பில் மகளையும் ,
பையை பிடித்தபடி மகனையும் அழைத்துக் கொண்டு, அடுத்த பேருந்தை பிடிக்க வேக வேகமாய் நடந்து சென்றாள் வெண்ணிலா....

அன்றே வரச்சொன்ன மாமியாரையும்,
எப்பொழுதும் தன்னை மட்டும் தனியே அனுப்பி வைக்கும் கணவனையும், இன்னும் தேக்கி வைத்த பல கவலைகளையும் நினைத்து விழியோரம் கண்ணீரை தேக்கியபடி சென்றுகொண்டிருந்தாள்...

அம்மா வீடு செல்லும் சந்தோஷம் துளி கூட அவளால் உணர முடியவில்லை, கடமையும், மன வலியும் அவளை பிழிந்து எடுத்தது....

இப்படி குழப்பங்களோடு சென்றிருந்தவள் திடீரென உணர்ந்தாள், பையை பிடித்து வந்த மகனை காணவில்லையென ....

திரும்பும் திசையெல்லாம் அவன் அழுகுரலும், பார்க்கும் இடமெல்லாம் அவன் முகமே தெரிவது போல் பரிதவித்து தேடினாள்...
இவள் அழுவதை பார்த்து மகளும் அழ, மனதின் கவலையல்லாம் சிதறி மகனை தேடி திரியலானாள்...
அந்த நெரிசலான சாலையின் ஓரங்களில்...

விழியின் ஓரமாய் விம்மும் அழுகுரல் ஒன்று தென்பட, அம்மா அம்மாவென
தேம்பியபடி மகன் தென்பட்டான்
அவன் வாங்கித் தர சொன்ன தேநீர் கடை வாசலிலேயே...

தன் மனதின் வலியில் ஏதோ ஒரு நொடியில் மகன் கேட்டதை வாங்கித் தராமல் போனதை எண்ணி கட்டியணைத்து கதறி அழுதாள்...

அம்மாவை காணாத உலகில் ஐந்து நிமிடம் இருந்தவன், அவளை பார்த்ததும் அழுது அழுது " அம்மா இனி எதுவும் வாங்கி தர சொல்லி கேட்கமாட்டேன்" என்று இருக்கமாக அணைத்துக்கொண்டான்...

மகனின் வார்த்தைகள் கேட்டு நொறுங்கி போனவள்,
உயிரான இருவரையும்
கட்டி அணைத்து முத்தமிட்டாள்,
கண்ணீரில் மண்ணிப்பு கேட்டாள்........

எழுத்து
சுகன்....

எழுதியவர் : சுகன் (10-Dec-18, 5:38 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : vennila
பார்வை : 146

மேலே