ஐயோ - எம் பையன் பேரு

ஏன்டா மவனே கப்பல் கவிந்த மாதிரி தலையில கையை வச்சிட்டு இருக்கிற?
@ நான் என்னத்தம்மா சொல்லுவேன்? எனக்கு எப்பக் கல்யாணம் ஆச்சு?
@ உனக்கு முப்பது வயசு நடக்கிறபோது கல்யாணம் ஆச்சு. இப்ப அதுக்கென்னடா? நீ சந்தோசமாத்தான்டா குடும்பம் நடத்திட்டு இருக்கற.
@@@ அது சரிம்மா. நானும் என் மனைவி கண்மணியும் எத்தனயோ வேண்டுதல் எல்லாம் செஞ்சோம். நாப்பது வயசுல எம் பையன் பொறந்தான். எல்லோரும் இந்திப் பேர வைக்கிறாங்களேன்னு நானும் எம் பையனுக்கு ஆசைப்பட்டேன். தொலைக் காட்சி நிகழ்ச்சில கேட்ட ஒரு சொல்லை எம் பையனுக்கு பேரா வச்சு ஊராட்சி மன்றத்திலே பதிவு பண்ணிட்டேன்.
@@@ ஆமாம் அவுனுக்கு சேவக்குன்னு பேரு வச்ச. தமிழ்ப் பேர வைடான்னு நாஞ் சொல்லியும் நீதான் எம் பேச்சைக் கேக்குல. சரி இப்ப என்ன பிரச்சனை?
@@ அர்த்தம் தெரியாமலே எம் பையனுக்கு 'சேவக்' -ன்னு பேரு வச்சுட்டேன். இப்பத்தான் அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுது.
@@ என்ன அர்த்தம்டா பொன்னையா?
@@ 'சேவக்' -ன்னா வேலைக்காரன்னு அர்த்தமாம். அய்யோ! அய்யோ!
@@ என்னது வேலைக்காரனா?
@@@ ஆமாம் அம்மா. ஆமாம். இந்தப் பேருக்கான அர்த்தம்
சனங்களுக்கும் அவங்கூடப் படிக்கிற பையன்களுக்கும் தெரிஞ்சுதுனா உம் பேரனை எல்லோரும் '"அதோட வேலைக்காரன்.போறான்..டேய், வேவைக்காரா இங்க வாடா"ன்னெல்லாம் கூப்புட்டுக் கிண்டல் பண்ணுவாங்களே..நான் என்னம்மா செய்வேன்.
@@ ஒரு நல்ல தமிழ்ப் பேரா பையனுக்கு வச்சு அவம் பேர சட்டப்படி மாத்திருடா பொன்னையா?
@@சரிம்மா..அப்பிடியே செய்யறேன்.
■■■■■■■■■■■■◆■◆◆◆◆●●○●●●●●●
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sevak = servant

எழுதியவர் : மலர் (10-Dec-18, 7:15 pm)
பார்வை : 192

மேலே