வண்டிக் கொட்டில் விற்பனை Garage Sale
கனடாவில் கோடைக்காலம் வந்தவுடன் எல்லோருக்கும் ஒரே குதுகாலம். நேரத்தை ஒரு மணி நேரம் தள்ளிப் போடவேண்டும். குளிர் காலம் மறைந்து வெப்ப காலம் பிறந்துவிடும். வீதியில் செரி மரங்கள் பூத்துக் குலுங்கும். சனி ஞாயிறு தினங்களில் வீட்டுத் தோட்டத்தில் மாமிச உணவை சுட்டு, சோளத்தொடும் சாப்பிடுவது கனேடிய கலாச்சாரத்தில் ஓன்று. வீட்டில் பாவித்த பொருட்களை சனி அல்லது ஞாயிறு தினங்களில் காலை எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை கார் கராஜ் முன் விற்பனை செய்வதை பல வீடுகளில் நடப்பதை கோடைக்காலத்தில் காணலாம் அதிகப் பணம் கொடுத்து மரத் தளபாடங்கள், நூல்கள், ஓவியங்கள், கணனி வாங்க வசதி இல்லாதவர்கள் கராஜ் விற்பனயில் மிக குறைந்த விலையில் . பாவித்த பொருட்களை கராஜ் விற்பனையில் வாங்கலாம். பெரறுமதி வாய்ந்த பாவித்த லப் டாப் கணினியை அதிர்ஷ்டம் இருந்தால். ஐம்பது டொலருக்கும் வாங்கலாம். சில சமயம் திருப்தி இல்லாவிட்டால் இரு நாட்களுக்குள் வாங்கிய பொருளை திருப்பிக் கொடுக்கலாம். இது ஆடை, கண்ணாடி பாத்திரங்கள் போன்ற பொருட்களுக்குப் பொருந்தாது. பேரம் பேசி வாங்கலாம்.
நான் தேடி சென்ற கராஜ் விற்பனை இடம் என் வீட்டில் இருந்து அரை மைல்தூரத்தில் இருந்தது. என் காரை பார்க் செய்ய இடம் கிடைத்தது என் அதிர்ஷ்டம் அந்த வீட்டுக்கு நடந்து சென்றேன். பொருட்களின் விலை எழுதி வீட்டின் கராஜ் முன் வைக்கப் பட்டிருந்தது அங்குநி ன்ற கூட்டத்தில் நான் ஒருவன் தான் வெள்ளையன் அல்லாதவன். அந்த வீட்டுக்காரனும் ஒரு ஆசியன் என்பது அவனின் தோற்றத்தில் தெரிந்தது. ஒருவேளை இந்தியனாக இருக்குமோ என யோசித்தேன். அவனின் இரு மகன் மாரும் ஆங்கிலத்தில் பேசியபடி ஜூஸ் வியாபாரம் ஒரத்தில் இருந்து செய்தார்கள். வீடுட்க்காரனுக்குவனின் கனேடிய வெள்ளை இன மனைவி உதவிக்கு நின்றாள்.
அந்த கராஜ் விற்பனை நடக்கும் வீட்டுக்கு அருகே உள்ள வீதிகளில் பெரிய ஆங்கில எழுத்துகளில் SALE! SALE!! SALE!!! VERY BIG SALE என்று விற்பனை நடக்கும் இடம் பற்றி விபரம் எழுதி இருந்தது . அந்த விளம்பரத்தை பார்த்து பொருட்கள் விற்கும் வீட்டை நாடிச் சென்றனர் பலர். சில சமயம் பல வீடுகளில் இந்த விற்பனை இடம் பெறுவதுண்டு. சிலர் தமக்கு வேண்டிய பொருட்களை விற்கும் வீடுகளை தேடிச் செல்வார்கள் .
அந்த கராஜ் விற்பனையில் பொருட்கள் வாங்குவது ஒரு தனி அனுபவம்.
ஓவியம், சிலைகள் , பழங்காலப பொருட்கள் நூல்கள் போன்றவற்றின் அருமை தெரியதவர்கள் பலர் . மிக குறைந்த விலைக்கு வைத்திருந்த அந்த வீட்டுக்கு சென்றேன்.
அங்கு விற்பனைக்கு இருந்த நடராஜர் சிலையை பார்த்ததும் வீட்டு சொந்தக்காரன் ஒரு இந்து என்று என்னால் ஊகிக்க முடிந்தது, பல தமிழ் ஆங்கில நூல்கள் அடுக்கி வைத்திருந்த மேசைக்கு சென்றேன். நான் ஒரு புத்தகப் பூச்சி .
அது ஒரு தமிழரின் வீடு என்பதை என்னால் விரைவில் அறிய முடிந்தது . அங்கிருந்த மிழ் நூல்களில் பல பழைய தமிழ் நூல்கலான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், கள்வனின் காதலி, தியாகபூமி , அமர தாரா, மகுடபதி அபலையின் கண்ணீர் திகம்பர சாமியார் . மதன கல்யாணி. மருங்காபுரி மரமக் கொலை சோலைமலை இளவரசி, அலை ஓசை. தேவகியின் கணவன். லட்சுமியின் மியின் மிதிலாவிலாஸ், . ராஜாளி மடம். பெண் மனம். மற்றும் அகல் விளக்கு குறிஞ்சி மலர் ஆகிய நூல்களை கண்டு ஆச்சரியப் பட்டேன்.
வீட்டின் எஜமாட்டி வெள்ளை இனப் பெண். அவரின் கணவர் தமிழராக இருக்கலாம் என நினைத்தேன் அவரின் பிள்ளைகள் இருவருக்கும் தமிழ் பேச வராது. ஆனால் பேசுவது புரியும் என அறிந்தேன் சுமார் இருபது நூலகள்அனைத்தும் ஐயிந்து டொலர்கள் .
என்னால் நம்ப முடியவில்லை நான் தேடித் திரிந்த கிடைக்க முடியாத நூல்கள் அங்கிருந்தன. புத்தம் புதிய நூல்களாக காட்சி தந்தன. நூல்களில் முதல் பக்கத்தை புரட்டிப் பார்த்தேன் புலவர் சிதம்பரப்பிள்ளை, புலோலியூர், யாழ்ப்பாணம் என்று முத்து போன்ற எழுத்துகளில் தமிழில் எழுதி இருந்தது.
புலோலி ஊருக்கு மிசிசாகாவில் என்ன வேலை?. ஒகோ அந்த வீட்டுச் சொந்தக்காரர் புலோலியை சேர்ந்தவரோ? அப்ப நம்ம வடமராட்சி ஆளுதான் என முடிவெடுத்து உடனே தமிழில் அந்த வீட்டு சொந்தக்காரரிடம் என்னை சண் என்று அறிமுகம் செய்தேன்
“ஐயா உங்கள் பெயர் என்ன என்று அவரைக் கேட்டேன்:
அதற்கு அவர்” தான் கான் (Kan)
என்றார் . பாகிஸ்தானியன் பெயர் போல் இருந்தது . எனகோத் தெரியும் கனடாவில் நீட ஸ்ரீ லங்கன் பெயர்களை சுருக்கி வைத்து விடுவார்கள். என் நண்பர்கள் பலர் அப்படி தங்கள் நீண்ட பெயர்களை பெயர் சிதைவு செய்துள்ளார்கள் . சண்முகம் பிள்ளை என்ற என் பெயரை சண் என்றே வைத்துக் கொண்டேன், கனேடியர்கள் என்னை கூப்பிடுவதுக்கு இலகுவாக.
“நீங்கள் ஈழத் தமிழரா? என்று அவரைக் கேட்டேன்::
“யெஸ்” என்றார் ஆங்கிலத்தில்:
”தமிழ் பேச வருமா”? என்று கேட்டேன்:
“ அவருக்கு பக்கத்தில் நின்ற அவரின் மகனில் ஒருவனுக்கு நான் சொன்னது புரிந்தது “Sorry uncle. My dad speaks little Tamil . He knows English and French, ” அரின் மகன் ஆங்கிலத்தில் பதில் சொன்னான் . நான் பேசுவதை ஆங்கிலத்துக்கு மாற்றினேன்
“Mr Kan what is your full name “?
“Sithamparapillai Kanapathipillai. My friends call me Kan “
“Can you speak Tamil}?
Little little. My father was a Tamil poet. He taught me Tamil“
“நீங்கள் பிறந்தது கனடாவிலா”?
“இல்லை , கொழும்பில், ஆறு வயது மட்டும் கொழும்பில் இருந்தனான் “ என்றார் சுருக்கமாக
“இங்கேயா படித்தனீர்
?.
“ம். கல்லூரியில் படித்து பின் யோர்க் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றேன் . மேலும் படித்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்”
“உங்கள் தந்தையும் படித்தவரா. புத்தகத்தில் எழுதி இருக்கு ’?
“புலோலி ஊரில் அவரை சிதம்பரப்பிள்ளை புலவர் என்று சொலவாவர்கள்” .
“இந்தத் தமிழ் புத்தகங்கள் எல்லாம் அவருடையதா “?
“ம் ம். அவர் பல காலமாக சேகரித் நூல்களில் இவை சில. யாழ்ப்பாணம் நூல் நிலையத்தில் இருந்த விலை மதிக்க முடியாத நூலகளை எரிந்தது போல், என் அப்பா கொழும்பு ராயல் கல்லூரியில் படிப்பித்த காலம். 1983 இனக் கலவரத்தில் வெள்ளவத்தையில் எங்கள் வீட்டில் இருந்த நூல்களும் எரிந்து விட்டன”
“அப்போ இந்த நூல்கள் எப்படி தப்பின” ?
“நல்ல காலம். என் அப்பா இந்த நூல்களை கராஜில் ஒரு பெட்டிக்குள் வைத்ததால் இவை எரியாமல் தப்பியது ”
“இந்த நூல்களுக்கு நீண்ட ஆயுள்”
கான் சிரித்தார்.
“நான் ஒரு எழுத்தாளன் . நான் பிறந்தது பருத்தித்துறை . படித்தது ஹார்டலி கல்லூரியில் சிறு வயது முதல் நான் கதைகள் எழுதி வந்தேன். எனக்கு கல்கி வாடுவூர் துறைசாமிஐயங்கார் லக்ஷிமி அகிலன் போன்ற எழுத்தளர்களின் நூல்கள் என்றால் விருப்பம் அவரகள் எழுதிய நூல்கள் இதில் உண்டு உங்கள் அப்பா போல் பல புலவர்கள் ஒரு காலத்தில் புலோலியில் இருந்தவர்கள் .அதுவும் உங்கள் ஊரின் பெயர் அப்போது ஆட்சி செய்த மன்னர் புலவர் ஒருவருக்குத் தானமாகக் கொடுத்ததால் புலவர்களின் கவிதை ஒலி அவ்வூரில் கேட்டதால் அவ் ஊர் பெயர் புலோலியாக மருவி வந்தது அவ்வூர்வாசிகள் அனேகர் படித்த பட்டதாரிகள் . உங்கள் அப்பாவோடு நான் பேச முடியுமா “? :
“ மன்னிக்கவும் . அவர் இப்போ உயிரோடு இல்லை””, என்றார் கண்களில் கண்ணீர் மல்க, கான் என்ற கணபதிபிள்ளை.
“ என்ன அவர் உயிரோடு இல்லையா “?
“ஆறு மாதங்களுக்கு முன் அல்செய்மார் வியாதியால் அவர் இறந்து போனார் கடைசி காலத்தில் கவிதைகள் பல எழுதிய அவருக்கு ஒரு சொல் தமிழில் எழுத முடியாமல் போய்விட்டது நூல்களையும், பேப்பரையும், பேனாவையும் உற்று பார்த்தபடியே இருப்பார். . அவர் ஒரு நாள் கல்கியின் பார்த்திபன் கனவு என்ற நூலை கையில் வைத்தபடியே கண்மூடி விட்டார் “
என்னால் அந்த புலவரின் மகன் சொன்னதை நம்ப முடியவில்லை
“உங்கள் அப்பாவின் படம் உங்களிடம் இருகிறதா “?
நான் சொன்னதை புரிந்து கணபதிபிள்ளையின் மகன், வீட்டுக்குள் சென்று தன் தாத்தாவின் படத்தைக் கொண்டு வந்து எனக்குக் காட்டினான். படத்தைப் பார்த்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் மீண்டது. அந்தப் படம் எனக்கு தமிழ் இலக்கணம் படிப்பித்த சிதம்பரப்பிள்ளை புலவரின் படம், .அதே புன் சிரிப்பு எத்தனை தடவை அவரிடம் இலக்கணப் பிழைகளோடு நான் தமிழ் எழுதிய படியால் என் கையில் நான் அடி வாங்கி இருக்கிறேன். நான் எழுதிய கதைகளையும் கவிதைகளையும் ரசித்து வாசித்து பிழை திருத்தியவரும் அவரே.
அங்கிருந்த நூல்கள் எல்லாவற்றையும் கான் சொன்ன விலைக்கு பணம் கொடுத்து வாங்கினேன்.
“சண் இந்த நூல்களை என்ன செய்யப் போகுறீர் “ கான் கேட்டார்
“ நான் அங்கத்தினராக இருக்கும் முது தமிழர் சங்கத்தின் வாசகசாலைக்கு தானமாகக் கொடுக்கப் போகிறேன். முதியவர்ககள் விரும்பி வாசிப்பார்கள் ” என்றேன் .
“நல்ல யோசனை சண். எனக்கு இந்த நூலகளுக்கு நீர் பணம் தர வேண்டாம். என் அப்பாவின் நினைவாக முது தமிழர் வாசகசாலையில் இவை இருக்கட்டும்” என்றார் கான் .
*****
(உண்மையும் புனைவும் கலந்தது)