முதுமொழிக் காஞ்சி 72

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
உறழ்வெய் யோருக் குறுசெரு வெளிது. 2

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், பிறரொடு கலகம் விரும்புவார்க்கு அதற்குரிய சூழலையும், சச்சரவையும் ஏற்படுத்துவது மிகவும் எளிது.

பதவுரை: உறழ் – கலகம், வெய்யோர் - விரும்புவோர், உறு செரு - மிக்க போர்,
எளிது - எளிதாம்.

கலகப்பிரியருக்குப் பெரும்போர் எளிதில் நேரும் என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-18, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

மேலே