துசாரு உசாரு

டேய் அழகுப் பசங்களா, யாருடா நீங்க ரண்டு பேரும்? ஊருக்குப் புதுசு போல இருக்குது?
@@@@
ஆமாம் தாத்தா. நாங்க ரண்டு பேரும் ரட்டைப் பிறவிங்க. காவேரித் தாத்தாவோட பேரனுங்க.
@@@@
நல்லா அழகா இருக்கிறீங்க? நம்ம ஊருத் திருவிழாவுக்கு வந்தீங்களடா சாமி.
@@@@
ஆமாங்க தாத்தா.
@@@
காவேரிகூட எங்க பெரியப்ப மகந்தான். உங்க ரண்டு பேரோட பேருங்களச் சொல்லுங்கடா கண்ணுகளா.
@@@@
எம் பேரு துஷார். இவம் பேரு உஷார்.
@@@@@
என்ன பேருங்கடா இது. துசாரு உசாரு..திருடங்க நடமாட்டம் உள்ளது. மக்கள் எல்லா உசாரா இருங்கணும் திருவிழா சமயத்தில ஒலி பேருக்கில எச்சரிக்கை செய்வாங்க. துசாரு...ஒண்ணும் புரியலயே.
@@@
தாத்தா உசாரு இல்ல. உஷார்.
@@@@
எனக்கு அந்தப் பேர உச்சிரிக்க முடில. எங்க ஊர்ல நீ அந்தப் பேரச் சொன்ன மாதிரி தான் சொல்லுவாங்க.
@@@@
எம் பேரு துஷார். துசாரு இல்லங்க தாத்தா.
@@@@
எல்லாம் அந்த சினிமாவல வந்த வினை. பட்டிக்காடே கெட்டுப் போச்சு. யாரும் பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்ல. நீங்க பட்டணத்துக்காரங்க. சரி, உங்க பேருங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@
எங்க அம்மா, அப்பாவுக்கே தெரியாதுங்க தாத்தா. ஒரு இந்திப் படத்தில வர்ற பேருங்கள எங்க ரண்டு பேருக்கும் வச்சுட்டாங்க.
@@@@
சரிடா கண்ணுகளா, மகராசனா இருங்கடா.
@@@@
நன்றி தாத்தா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆■
Tushar = forest, snow, winter
Ushar = refuge at the Guru

எழுதியவர் : மலர் (18-Dec-18, 12:51 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 131

மேலே