விடாமுயற்சிக்காரி விசாலாட்சி

ஈழத்தில் உள்ள வன்னியில் அமைந்த பூநகரி - பரந்தன் B357 பதையில் உள்ளது நல்லூர் கிராமம். இக் கிராமத்துக்கு வடக்கே கிலாலி ஏரியுண்டு. கிராமத்தில் தான் முதன் முதலாக வடமாகாணத்தில் ஒரு நல்லூர் முருகன் கோவில் இருந்ததாக சில வரலாற்று ஆராச்சியாளர்களின் கருத்து. அதற்கு இணங்க அக்கிராமத்தில் முருகனுக்கு கோவில் ஓன்று உண்டு ஈழத்துப் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட சித்தர்குறிச்சி, ஞானிமடம் , செட்டியகுறிச்சி கிராமங்களில் நல்லூரும் என்ற கிராமம் ஒன்று . பரந்தன் நகரம் சில மைல் தூரத்தில் உள்ளதால் நல்லூரில் இருந்து நடந்தே போய் விடலாம்.

விசாலாட்சி அக்கிராமத்தில் எல்லோராலும் விடாமுயற்சிக்காரி என்று பெயர் வாங்கினவள். அவளின் வயது எழுபதை எட்டும் . சுறுசுறுபுக்காரி . பற்கள் இன்னும் விழவில்லை . ஓயாது வேலை செய்தபடியே இருப்பாள். சீட்டு பிடிப்பதில் நம்பிக்கையானவள் எனப் ஊரில் பெயர் வாங்கினவள். எதையும் திட்டம் போட்டு செயல் படுத்துவாள்.

சில வருடங்களுக்கு முன் விவசாயியாக இருந்த கணவன் துரையரை . விமானத் தாக்குதலின் போது விசாலாட்சி இழந்தவள். துரைசாமி விட்டுச் சென்றது அரை ஏக்கர காணி. ஒரு ஓலைக் குடிசை, இரு மகன்கள். .மூத்தவன் நந்தன். ஈழப் போரில் மாவீரனானான் இளையவன் காந்தன் காதலித்து திருமணாம் செய்தவன் குடும்பதோடு தோணியில் அகதிகள் கூட்டத்தோட்டு தமிழ் நாடு சென்று விட்டான். விசாலாட்சி தன் காணியையும் குடிசையையும் விட்டு மகனோடு புலம் பெயர மறுத்து விட்டாள்.


“எனேய் அம்மா நானும் என் குடும்பமும் போயிட்டால் இந்த ஊரில் நீ தனியாக இருந்து என்ன செய்யப் போறாய்? சொந்தக்காரர் பலர் வவுனியாவுக்குப் போயிட்டினம் . சிலர் என்னோடு தமிழ்நாட்டுக்கு வருகினம். நீயும் எங்களோடு வாவன். சமாதானம் வந்தவுடன், திரும்பி ஊருக்கு வருவம்” காந்தன் தாயுக்கு சொன்னான் .

“என்னடா விசர் கதை கதைக்கிறாய்? இது நான் பிறந்த மண். இந்த மண்ணை விட்டு நான் வரமாட்டேன் செத்தால் இந்த மண்ணில் தான் நான் சாவன் “

“பிழைப்புக்கு என்ன செய்யப் போறாய்”?

“எண்டை காணியில் போரில் தப்பி இருக்கும் தென்னை, பனை மரங்கள் இருக்கு. அது போதும் நான் வாழ. அரை மைல் தூரத்தில் கிலாலி ஏரி இருக்கு மீனுக்கு ”

மகனுக்கு தெரியும் தன் தாய் சரியான பிடிவாதக்காரி என்று

“சரி நீ உன் இஷ்டப்படி உங்கை கிடந்து கஸ்டப்படு . நான்போறன்” என்று அவன் குடும்பத்தோடு ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்குப் போய் விட்டான் .

****

போரினால் பாதிக்கப்பட்ட மீனவன் மகன் ராசன். பெற்றோரை இழந்தவன். அவனைக் கவனிக்க எவருமிலாமல் . எரிக் கரை ஓரத்தில் அழுதபடி நின்றான். அவனுக்கு வயதுக்கு பதின்ரெண்டுக்கு மேல் இருக்கும். சில நாட்கள் விசாலாட்சி வீட்டுக்கு மீன் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான் . அவனைக் கண்டவுடன் அவளுக்கு போரில் இறந்த தன் தம்பி மகன் நினைவு வந்தது . அவன் மேல் பரிதாபப் பட்டு தன் குடிசைக்கு உதவிக்கு அழைத்துச் சென்றாள் விசாலாட்சி.

இரு ஜீவன்களும் வாழ வருமானம் வேண்டுமே. தனக்குப் பிழைப்புத் தேடினாள் விசாலாட்சி. ஒருவரும் வேலை கொடுக்கவில்லை . அவள் காணியில் போரினால் பாதிகப் படாத சில பனை மரங்களும் களும் தென்னைகளும் நின்றன. ஏதோ நல்ல காலம் அவையும் , அவளின் குடிசையும் அரசின் வான்படையின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டன.

“ ராசன் இனி நீயும் நானும் வாழ எமக்கு உதவப்போவது இந்த பனை தென்னை மரங்கள் தான். உன் உதவி எனக்குத் தேவை” விசாலாட்சி ராசனுக்கு சொன்னாள்.

“ஆச்சி, நான் என் அம்மா அப்பா சகோதரங்களை போரில் இழநது தனித்து நின்ற போது எனக்குக் கைகொடுத்து, உன் குடிசைக்கு கூட்டி வந்தவள் நீ. இனி நான் உன் பேரன். உன் சொற் படி செய்வேன்” ராசன் சொன்னான் .

“ நல்லது ராசா, இந்த மரங்கள் கற்பகத்தரு . அதோடு பக்கத்தில் ஏரி இருக்கு தேவை பட்டபோது , மீனுக்கு. உனக்கு உன் அப்பாவோடு மீன் பிடித்த அனுபவம் வேறு உண்டு. இது பொதும் நாம் இருவரும் வாழ ”, நம்பிக்கையோடு விசாலாட்சி சொன்னாள்

“ நீ சொல்வது உண்மை ஆச்சி. நான் படிக்கும் போது என் ஆசிரியர் இந்த இரு மரங்களைப் பற்றி சொன்னது என் நினைவுக்கு வருகுது”

“என்ன ராசா அவர் சொன்னார்”?

“பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினமாம். 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளருமாம். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் என்று கற்பகதருவுக்கு ஒப்பிடுவினமாம் “

“சரியாகச் சொன்னாய் ராசன் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள் நீங்கும். பனங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்

பனங்கிழங்கை உலர்த்தி, இடித்து, மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும். பனங்கிழங்கிற்கு குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் கிடைகும் . ஊரில் உள்ள கள் இறக்கும் மாரிக்கு அது தெரியும்.. அவன் உயிரோடு இருக்கிறான் என்ற கேள்வி பட்டடேன். “

“வேறு என்ன ஆசசி பதநீரின் பயன்”?

“சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுவாங்கள். இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். . நீயும் இந்த பனை மரங்களில் இருந்து இந்த பொருட்களை குடிசைத் தொழில் ஆரமபிதல் என்ன. நான் சீட்டு பிடித்து சேமித்த பணம் கொஞ்சம் இருக்கு. அதோடு போரினால் பத்திப்பட்டு வருமானம் இல்லாது இருபவர்களுக்கு வேலையும் கொடுக்கலாம் . பொருட்களை வன்னியில் உள்ள நகரங்களில் விற்றகலாம்



“ஆச்சி உது நல்ல யோசனை. அப்போ தென்னை மரத்தை பாவிக்கவில்லையா:?


“ஏன் இல்லை ராசன்? கருப்பட்டி, கள்ளு, தென்னம் சிரட்டை யில் பொருட்கள் . தும்பில் கயிறு செய்யலாம். முக்கியமாக தேங்காய் எண்ணெய் தயாரிக்க இயந்திரம் தேவை. தென்னோலை யில் கிடுகு. ஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்யலாம்

பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கலாம்”

“ஆச்சி இந்த கிராமத்தில் கிடுகு முடைதல், ஓலை பின்னி கடகம் சுலகு செய்வதில் வதனியும், சுந்தரியும் கெட்டிக்காரிகள். கிராமங்களில் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கிடுகளைப் பந்தல், மேடை, வேலி, வீட்டு கூரை ஆகியவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள் , சிரட்டையில் அலங்காரப் பொருட்கள், அகப்பை போன்றவை செய்வதில் மதனி கெட்டிக்காரி. பனம் கள்ளு வடிக்க இருக்கவே இருக்கான்மாரி. நீங்கள் பனம் பழத்திலும், கிழங்கிலும் . உணவு பண்டங்கள் செய்யுங்கள். நான் அவைற்றை கொண்டு போய் பூநகரி, கிளிநோச்சி. பரந்தன் ஊர்களில் உள்ள சாப்பட்டுக் கடைகளில் கொடுத்து காசு கொண்டு வாறன்”

“சரி ராசன் ன் முதலில் ஒரு நாளைக்கு மாரி, மதனி வதனி. சுந்தரியை எங்கள் குடிசையில் கூப்பிட்டு இதை பற்றி பேசுவோம். அவர்கள் எல்லோரும் சம்மதித்தால் ஒரு மாதத்துக்குள் இந்தத் தொழிலை ஆரம்பிப்போம் என்ன”?

“நல்ல யோசனை ஆச்சி. “

***

மாதங்கள் பல சென்றன. விசாலாட்சியும் ராசனும் எதிர்பார்க்கவில்லை தங்களின் கடும் உழைப்பில் கைத்தொழில் திட்டம் விரைவாக வளரும் என்று. விசாலாட்சியின் குடிசை கல் வீடாகி, தொழில் செய்யும் இடமாக மாறிற்று ., எட்டு பேர் அங்கு வேலை செய்தார்கள். மாரியையும், ராசனையும் தவிர மற்றவர்கள் பெண்கள். அனைவரும் போரினால் பாதிக்கப் பட்டவர்கள் .

பூநகரி பரந்தன் கிளிநொச்சி ஆகிய ஊர்களுக்கு அவ் வழியே போகும் பயணிகளும் சங்குப்பிட்டி பாலம் வழியே மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் போகும் பயணிகளும் பனை தென்னை உணவுகளை சுவைத்து செல்ல ஒரு “ஆச்சி உணவகம்” நல்லூர் கிராமத்தில் ஆரம்பிகப்பட்டது . காலப் போக்கில் அதை கேள்விப்பட்ட காந்தன் தன் குடும்பத்தோடு இந்தியாவில் இருந்து ஊருக்குத் திரும்பி, தாயுக்கு உதவியாக இருந்தான்.

“பார்த்தியா, காந்தன் நான் அப்பவே உனக்குச் சொன்னேன். புலம் பெயர்ந்து போகாதே, ஊரிலை உள்ள கனிவளத்தை விருத்தி செய்து சந்தோசமாய் இங்கு வாழலாம் எண்டு . அதோடு பல குடும்பங்களுக்கும் வாழ வழிகாட்டலாம் எண்டு” என்றாள் விசாலாட்சி மகனுக்கு .

காந்தன் ன் தவறை ஒப்புக் கொண்டான்

****

( யாவும் புனைவு)

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (17-Dec-18, 4:35 pm)
பார்வை : 233

மேலே